ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஶ்ரீ ஆதி சங்கர மந்திர்-ரிஷிகேஷ், உத்தராஞ்சல்
(Sri Adi Shankaracharya with disciples)
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராசார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்துடன் ரிஷிகேஷில் ஸ்ரீ ஆதி சங்கர மந்திர் 14 மே 1967 அன்று புனிதமான நாளான சங்கர ஜெயந்தி அன்று துவங்கப்பெற்றது. மே 12 முதலே கலச ஸ்தாபனம் மற்றும் ஹோமங்கள் செய்து வேத பண்டிதர்கள் ப்ரதிஷ்டை செய்து வைத்தனர். இந்த திருகோயில் லக்ஷ்மன் ஜூலாவை அடுத்து புனிதமான கங்கை கரையில் அமைந்திருக்கிறது.
அன்று பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளும் விஜயவாடாவில் தங்கியிருந்தனர். பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் அந்த ஆண்டு சங்கர ஜெயந்தி 5 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.